சோயா குழம்பு:
சிறந்த கால்சியம் சத்து நிறைந்த சோயா அல்லது மீல் மேக்கரில், மசாலா பொடிமாஸ், பிரயாணி என பலவகை செய்வதுண்டு.இந்த குழம்பு வகை ஒரு நல்ல சுவை நிறைந்தது, பொது வாக இந்த சோயாவில் நாம் சேர்க்கும் உப்பு, காரம் போன்ற பதார்த்தங்களளை ஈர்க்கும் தன்மை குறைவு, அனால் இந்த குழம்பு வகையில் நன்றாக சார்ந்து சுவைகூட்டும் வண்ணம் அமைவது சிறப்பு. சைவர்கள் விரும்பி ஏற்பது இந்த சோயா செய்முறை.
தேவையான பொருட்கள்:
சோயா -1 கோப்பை
இஞ்சி பூண்டு விழுது-1தே.க
தக்காளி-1
மிளகாய்த்தூள்-1 1/2
மஞ்சள் தூள்-1/4 தே.க
வெங்காயம்-1
மல்லித்தழை -சிறிது
அரைக்க:
சோம்பு-1தே.க
சீரகம் 1/2தே.க
பாதாம்-4
தேங்காய்-2 மேஜைக்கரண்டி
மிளகு-1/2தே.க
தளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
பட்டை-1இன்ச்
கிராம்பு-1 2
லவங்க இலை
கறிவேப்பிலை-1 கொத்து
செய்முறை:
சோயாவை 20 நிமிடம் வரை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து இரண்டு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம் நறுக்கிக்கொள்ளவும். அரைக்க பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யாவும். கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் வெட்டி வைத்துள்ள சோயாவை சேர்த்து சிறிது வதக்கி, உப்பு மிளகாய்ப்பொடி, மஞ்சள் போடி, அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
குக்கரில் ஓரிரு சவுண்ட் விட்டு இறக்கவும்.
ஆறியதும் மல்லி இல்லை சேர்த்து பரிமாறவும். இது சாதம், சப்பாத்தி, பூரிக்கு கூட பரிமாறலாம்.பிரியாணிக்கு சால்னா போன்றும் சேர்த்துக்கொள்ளவும்.
Post A Comment: