முட்டை க்குழம்பு:
முட்டைக்குழம்பு, பார்க்கும்போதே பசியைத்தூண்டும் அவித்தமுட்டை காரக்குழம்பு. பெரும்பாலும் முட்டையை விரும்பி உண்ணுபவர்கள் அதிகம் சிலருக்கு அவித்தமுட்டை, சிலருக்கு பொரித்த முட்டை இன்னும் சிலர் தோசை வகையில் விருப்பாம் காட்டுவார்கள். இந்த முட்டைக்குழம்பு சுவையும் மனமும் நிறைந்த ஒன்று, அவித்தமுட்டையோடு, குழம்பு கொதிக்கும் பொது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி கொதிக்கவைத்து செய்வது இன்னும் சுவையைக் கூட்டும். இதன் முறை விளக்கம் காண்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை-4(3+1)
வெங்காயம்-1
பூண்டு 7 பல்
தக்காளி-1
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
சாம்பார் மிளகாய்த்தூள்-2 1/2 தேக்கரண்டி, அல்லது மிளகாய்த்தூள்-1 மல்லித்தூள் 1 என்னும் விகித்தில் எடுத்துக்கொள்ளவும்.
புளிச்சாரு -2 மேஜைக்கரண்டி
செய்முறை:
1.முட்டை 3 அவித்துக்கொள்ளவும்.அவித்த முட்டையின் மேல் சிறிய கீறல்கள் போடவும் இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டயின் சுவயைக்கூட்டும். ஒரு முட்டையை குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.
2.வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
3.வானலியில் எண்ணெய் காயவைத்து சோம்பு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும்.
4.பிறகு, வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
5.இப்போது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்.
6.இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வரைகொதிக்கவிடவும்.
7.நன்கு கொதிக்கும் பொது தீயை சிம்மில் வைத்து உடைத்த முட்டயை நிதானமாக நடுவில் ஊற்றவும்.
8.இரண்டு நிமிடம் இளந்தீயில் கொத்திதபின் தீயை கூட்டவும், நன்கு கொதிவரும்போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
9. சுவையான முட்டை குழம்பு தயார்.
குறிப்பு:
மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலே மிதந்து வரும். உடைத்தமுட்டை ஊற்றும் பொது கண்டிப்பாக தீயை குறைக்கவேண்டும் இல்லாவிட்டால் முட்டை பிரிந்துவிடும். ஊற்றிய முட்டை வேகும்வரை கரண்டி போட்டு கிளறக்கூடாது.(3 நிமிடம்)
Post A Comment: