Articles by "Kulasekaram News"
Showing posts with label Kulasekaram News. Show all posts
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ஏற்பாடு செய்துள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் தமிழிசை சவுந்தராஜன். அப்போது தொகுதி மக்களிடம் வெகு இயல்பாக பேசி மக்களை கவர்ந்தார்.

அந்த சமயத்தில் மகராசன் என்ற சிறுவனை சந்தித்திருக்கிறார். அப்போது சிறுவன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழிசைக்கு தெரியவந்தது.

இதையடுத்து, சிறுவனின் இலவச சிகிச்சைக்கு குலசேகரத்தில் மூகாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழிசை சவுந்தராஜன் ஏற்பாடு செய்தார். அங்கு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தமிழிசை சவுந்தராஜன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் சிறுவனின் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார்.

இது சம்பந்தமான ட்வீட்டில், "தூத்துக்குடியில்..பிரச்சாரத்தின்போது.. சந்தித்த... மகராசன். சிறுநீரக.. சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு..செய்ததினால். இன்று குலசேகரத்தில்..மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில்.

கட்டணமில்லாமல்..சிகிச்சை பெற்று வருகிறார்.. அவரை இன்று நேரில் சென்று நலம் விசாரித்தேன்..நலம் பெற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
பெட்டிக்கடை ஒன்றில் பொருட்களை வாங்கிய மர்மநபர்கள் 2 பேர், அந்த கடை உரிமையாளரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.
குலசேகரம் அருகே இஞ்சக்கோடு பகுதியை சேர்ந்தவர் சரோஜா. 60 வயதான இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு 2 பேர் பைக்கில் வந்தனர். சில பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறி அவற்றினை வாங்கி கொண்டனர். அந்த பொருட்களுக்கான பணத்தினை சரோஜாவிடம் இருவரும் கொடுத்தனர்.

அதனை பெற்றுக் கொண்ட கடை உரிமையாளரான சரோஜா, மீதி சில்லரை காசுகளை அவர்களிடம் எடுத்து கொடுக்க திரும்பினார். அப்போது அந்த 2 நபர்களும் சரோஜாவின் கழுத்தில் கிடந்த 6 சவரன் தங்க சங்கலியையும் பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பி சென்றனர்.

இதனால் நிலைகுலைந்தும், அதிர்ச்சியும் அடைந்த சரோஜா, குலசேகரம் காவல் நிலைய போலீசாருக்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பைக்கில் வந்து நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலசேகரத்தைச் சேர்ந்த ஒரு வீட்டுக்கு ரூ. 1 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மி்ன்சார வாரியம் பயனீட்டாளர்களிடம் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்கிறது. குறிப்பிட்ட நாளில் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் அபராதம் வசூலிப்பதோடு மின் இணைப்பையும் துண்டிக்கின்றனர்.
 
தற்போது பழைய மின் மீட்டர் மாற்றப்பட்டு புதிய எலக்ட்ரானிக்ஸ் மின் மீட்டர் மாற்றப்பட்டு வருகிறது. இந்த மீட்டரில் சில சமயங்களில் குளறுபடி ஏற்படுகிறது. இது போன்ற சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நெல்லை அருகே உள்ள குலசேகரத்தில் வசித்து வருபவர் கீதா. ஆஸ்பெட்டாஸால் ஆன சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த வீட்டுக்கு கடந்த காலங்களில் 240, 320, 260 என்ற யூனிட் அளவில் மின்சாரம் செலவிடுவதாக கணக்கீடு இருந்துள்ளது. ஆனால் கடந்த 4ம் தேதி கணக்கீட்டின் போது 16290 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.1 லட்சத்து 6344 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின் அட்டையில் கணக்கீட்டாளர் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார்.

இதை பார்த்த கீதா அதிர்ச்சி அடைந்தார். ஒரு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், டிவி, 4 பல்புகள் கொண்ட சிறிய வீட்டுக்கு 1.06 லட்சம் மின் கட்டணமா என மின் வாரிய அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.

அப்போது மின் மீட்டரில் பதிவாகியுள்ள மீட்டருக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இதில் வேறு ஓன்றும் செய்ய இயலாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் அவர் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.
குமரி மாவட்டத்தில் சாய்பாபா சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பூக்கள் நிறம் மாறிய சம்பவம் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
குமரி மாவட்டம் குலசேகரத்தில் சீரடி சாய்பாபா பஜனை மண்டலின் சார்பில் குலசேகரம் எஸ்ஆர்.கே.பி.பி பள்ளி வளாகத்தில் சாய்பாபா சிலைக்கு பக்தர்கள் புஷ்பாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

அங்கு கூட்டு பிரார்த்தனை, மானசீக பிரார்த்தனை உள்ளிட்ட வழிபாடுகளும் நடந்தன. பின்னர் சாய்பாபா சிலை பள்ளி அருகாமையில் உள்ள கிருஷ்ணா கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு தினமும் சாய்பாபாவுக்கு புஷ்பாபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சாய்பாபாவுக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்படும் மலர்கள் சிறிது நேரத்தில் நிறம் மாறுவதாக செய்தி பரவியது.

இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் கோயிலில் குவியத்தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாய்பாபா சிலைக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்படும் சிவப்பு நிற ரோஜா பூக்கள் சிறிது நேரத்தில் ஆரஞ்சு, இளம்சிவப்பு உள்பட பல வண்ணங்களில் மாறுகின்றன.

சில பக்தர்களுக்கு பூக்களை கூர்ந்து கவனிக்கும் போது அதில் சாய்பாபா உருவம் தெரிவதாக கூறினர். இதனால் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். இது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் காதலுடன் ஓடிய பெண் காதல் கசந்ததால் திரும்ப வீடு திரும்பினார். ஆனால் பெற்றோர் ஏற்க மறுத்ததால் பரிதவித்து வருகிறார். திருவட்டாறு அடுத்துள்ள வடக்கநாடு பகுதியை சேர்ந்தவர் ஆட்வின் சார்மி. பி எட் பட்டதாரி.
குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சிபு. சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இவருக்கும் பேஸ்புக் வழியாக அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையறிந்த ஆட்வின்சார்மியின் பெற்றோர் அவரிடம் படிபபு முடிந்ததும் அந்த வாலிபருக்கே திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.

இதனை ஏற்காத ஆட்வின்சார்மி தனது காதலுடன் கடந்த 4 ஆம் தேதி மாயமாகி விட்டார். காதல் ஜோடி திருவட்டார் காவல் நிலையத்துக்கு வந்தனர். போலீசார் ஆட்வின் சார்மியின் பெற்றோரை வரவழைத்தனர். 2 வாரத்தில் காதல் கசந்ததால் பெற்றோருடன்தான் செல்வேன் என ஆட்வின்சார்மி தெரிவித்தார்.

ஆனால் அவரது பெற்றோர் இனி இவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லை என கூறி விட்டனர். இதனால் ஆட்வின் சார்மி அழுது கொண்டே தனது காதலுடன் சென்றார். கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோரை மதிக்காமல் சென்ற பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என ஆட்வின்சார்மியின் பெற்றோர் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குலசேகரத்தில் காதல் என்ற பெயரால் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், 17 வயதான மைனர் பையனுடன் ஓடிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரம், அன்பு நகரைச் சேர்ந்த அந்த பையன் 17 வயதானவர். அவர் அப்பகுதியில் வேன் கிளீனராக வேலை பார்த்து வருகின்றார். அப்பகுதியிலேயே அமைந்துள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருடன் நெருங்கிப் பழகிய கிளீனருக்கு, நாளடைவில் அப்பழக்கம் காதலாக மாறியது.
இப்பழக்கத்தால் அம்மாணவியையும், அவருடைய தோழிகள் சிலரையும் கூட்டிக் கொண்டு சுற்றுலா என்ற பேரில் கன்னியாகுமரி சென்றுள்ளார் அவர். இத்தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று குலசேகரம் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அப்பையன் போலீசாரால் அழைத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். இருவரும் மைனர் என்பதால் வெறும் எச்சரிக்கையுடன் விட்டுவிட்டனர்.

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற அம்மாணவி வீட்டிற்கு திரும்பவே இல்லை. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடிக் களைத்துப் போய் போலீசில் மீண்டும் புகார் அளித்தபோதுதான் அவர் கிளீனருடன் ஓடியது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்தப் பையனின் வீட்டிற்குச் சென்ற போலீசார் அங்கிருந்த ஜோடியை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது அம்மாணவி நான் காதலனுடன் தான் செல்வேன் என்று அடம்பிடித்துள்ளார். இதனால் போலீசார் அம்மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பியதுடன், கிளீனரையும் அவருக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று மிரட்டி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குலசேகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.