Articles by "Economic News"
Showing posts with label Economic News. Show all posts
பல நாட்களாக மாற்றம் இன்றி இருந்த பெட்ரொல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை,,இறக்குமதி செலவு, அன்னிய செலாவணியில் மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வ்ழஙகப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தினசரி எண்ணெய் நிறுவனங்கள் விலையை அறிவித்து வருகின்றன.

கடந்த சில தினங்களாக இந்த விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.76.60 க்கு விற்கப்படுகிறது. இதைப் போல் டீசல் விலை நேற்றைய விலையை விட லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ. 69.25 க்கு விற்கப்படுகிறது.
வானொலியைப் பற்றி நினைக்கும் போது, ​​நாம் இப்போது வாழும் ஆன்லைன் உலகத்தையும், இணையத்தில் நாம் காணக்கூடிய ஒலிபரப்பு வாய்ப்புகளையும் ஒருபோதும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
ஆன்லைன் வானொலி மற்றும் இணைய வானொலி நிலையங்கள் உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றன, இவற்றைப் பற்றிய அற்புதமான விஷயம் என்னவென்றால், ஒலிபரப்பு மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் அனைத்தும் பெரும்பாலும் மென்பொருளால் ஆன்லைனில் கையாளப்படுகிறது.

இணைய வானொலி நிலையத்தைப் பொறுத்தவரை, உள்ளூர் வானொலி நிலையத்தைப் போல தயாரிப்புக் குழுவையும் குழுவினரையும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

தற்போது தமிழில் பல்வேறு ஆன்லைன் எப்.எம் சேனல்களின் வருகை பல புதியவர்களுக்கு வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இருந்தபோதும், இந்த சேனல்களுக்கு நேயர்களை அதிகரிக்க இதில் புதுமையை புகுத்திவருகின்றனர். சமீபத்தில் டான் எப்.எம். எனும் ஆன்லைன் சேனல் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டு பிரபலமாக இருப்பவர்களை கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் முயற்சியை செய்கிறது.

இதன் மூலம், இவர்களின் சேனல்களை விரும்பும் நேயர்கள், அதிகரித்திருப்பதாக கூறிவருகிறார்கள். விரைவில் இதுபோன்ற சேனல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாலும், இது போன்ற சேனல்கள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கவும் முயற்சிகள் நடப்பதாலும், தற்போது வேலை இழந்து இருக்கும் திறமை உள்ளவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது புதிய வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் ஸ்ட்ரீமிங், பாட்காஸ்ட் மற்றும் ஆன்லைன் ரேடியோ போன்றவை மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதை விரைவில் காண்பீர்கள் என்கிறார்கள் மென்பொருள் நிபுணர்கள்.
கொரோனா ஊரடங்கால் உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில், அடுத்த சில மாதங்களில் ப உணவு பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார்.
இன்று காலை செய்தியளார்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர், பல்வேறு நிதி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, பொருளாதா பேரிப்பு காரணமாக இந்தியாவில், அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும் என்று தெரிவித்தவர், கொரோனா வைரஸ் தாக்கத்தால் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மானாவாரி சாகுபடியின் பரப்பளவு 44% உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதேவேளையில், ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும். வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

உணவு தானிய உற்பத்தி 3.7 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி குறைந்துள்ளது

இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.

இந்தியாவின் 60% உற்பத்தித் துறை கொரனோ பாதித்த சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைக்கு மேற்கொள்ளும். சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாட்டில், 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி குறைந்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வழங்கப்படும்.

ஏற்கெனவே, வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதுபோல, கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படு வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்து உள்ளார். அன்படி, இஎம்ஐ அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதம் 4.40% லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வங்கிக் கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார். அதாவது, வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்டுகிறது.

மேலும், ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை என்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வசதி வழங்கப்படும் என்றும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் உலகெங்கும் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை எனக் கூறப்படும் அமெரிக்கப் பங்குச் சந்தை தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. தற்போது வர்த்தகம் எப்போது சீரடையும் என்னும் நிலை இல்லாமல் உள்ளது. எனவே பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குச் சந்தை முதலீட்டை வேறு இனங்களுக்கு மாற்றி வருகின்றனர்.
இந்திய நிறுவனப் பங்குகள் உலகச் சந்தையில் கடந்த வ்ருட்ம் டிசம்பர் வரை முடிந்த காலாண்டு காலத்தில் நல்ல விற்பனையைச் சந்தித்தது. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து அது குறைந்தது. கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் ஜனவரியில் 6300 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளும் பிப்ரவரியில் 1710 கோடி டால்ர் மதிப்பிலான பங்குகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கி உள்ளனர்.

அதே வேளையில் மார்ச் மாதம் மட்டும் சுமார் 8400 கோடி அளவிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர் விற்பனை செய்து தங்கள் முதலீட்டை இந்தியாவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் அளிக்கப்பட்ட முதலீடுகளை நீக்கி விட்டுப் பார்த்தால் மொத்தம் 6400 கோடி டாலர்கள் வரை முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது.

இப்போது நடந்து வரும் காலாண்டில் சீனாவின் வர்த்தக முடக்கம் பங்குச் சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தற்போது கொரோனா பரவுதல் காரணமாக அமெரிக்கா சீனா மீது எடுத்து வரும் நடவடிக்கைகள் பங்குச் சந்தையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி உள்ளது. எனவே இது குறித்து ஒரு முடிவு தெரியும் வரை சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தக முதலீட்டைக் குறைத்து வருகின்றனர்.