இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி குறைந்துள்ளது

இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.

இந்தியாவின் 60% உற்பத்தித் துறை கொரனோ பாதித்த சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைக்கு மேற்கொள்ளும். சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாட்டில், 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி குறைந்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வழங்கப்படும்.

ஏற்கெனவே, வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதுபோல, கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Axact

Kumari News18

"Kumari News18" E-Magazine from Nagercoil, Kanyakumari District, Tamilnadu. The Website has been publishing News and Information since June 2020. It is organised by YemYes Network. Through this site you can find News, Information, Historical Notes, Scientific Information, Achievers Articles, Stories and more...

Post A Comment: