மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி புரியும் ஊழியர்கள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்க சாஃப்ட்வேர் ஒன்றை பயன்படுத்த அரசு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் அடுத்தடுத்த துறைகளுக்கும் இதே மென் பொருள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அலுவலக நேரங்களில் பணியாளர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், அலுவலக நேரத்தில் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மென்பொருளை பயன்படுத்தும்போது வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு லாக் இன் ஐ.டி., பாஸ்வேர்டு வழங்கப்படும். இதனை பயன்படுத்தி பணியை ஆரம்பிக்கும்போது மென் பொருளுக்குள் நுழைய வேண்டும்.
மென்பொருள், அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.
கொரோனா காலத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சலுகையாக வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை யாரும் தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்று மேற்கு வங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் அலுவலத்திற்கு வரத்தேவையில்லை. அவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கூட்டங்கள் நேரடியாக நடப்பது தவர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீடியோ கான்பரன்சிங் வழியே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
Post A Comment: