யாருமே கேட்காத இடத்தில் மேம்பாலம் தேவை இல்லை என கூறி தக்கலையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார், தக்கலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தக்கலையில் 1.5 கி.மீ தூரத்திற்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும், வரும் 19 ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நான்கு வழி சாலை பணி நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் இருக்காது.
இது போன்ற பாலங்களால் அரசு பணம் தான் வீணடிக்கப்படுகிறது. தனது சுய லாபத்திற்காக இது போன்று செயல்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், பத்மநாபபுரம் நகர வியாபாரமே முடங்கி, வியாபாரிகள் தற்கொலை செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட கூடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post A Comment: