மாதாமாதம் வரும் அஷ்டமியில் துர்க்கை வழிபாடு செய்வது சிறந்தது. அம்பிகையைக் கொண்டாட உகந்த நாளான நவராத்திரி புரட்டாசி மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. “நவ” என்பது ஒன்பதைக் குறிக்கும். ஒன்பது இரவுகள் அம்பிகையை நோக்கி விரதம் இருந்து வழிபட வேண்டியதெல்லாம் ஈடேறும் என்பது நம்பிக்கை. இந்த வருடத்திற்கான துர்க்காஷ்டமி வரும் புரட்டாசி 31 – ஆம் தேதி வருகிறது.
புரட்டாசி மாதம் வரும் அஷ்டமி தினத்தன்று வீடுகளில் துர்க்கை அம்மனை நினைத்து வழிபடுதல் உடல் ஆரோக்கியத்தையும், மன மகிழ்ச்சியையும் தரும். தேவையில்லாத கவலைகள், குடும்பத்தார் இடையே இருந்த மனக்கசப்புகள் ஆகியவற்றை போக்கும் வலிமை கொண்டது துர்க்காஷ்டமி வழிபாடு.
நவராத்திரி
நவராத்திரி வழிபாட்டில் ஒன்பது நாளும் வீட்டில் கொலு வைத்து வழிபடுதல் முப்பெரும் தேவிகளின் கடாக்ஷத்தைத் தரும். வீரத்தினைத் தரும் துர்க்கை அம்மனை முதல் மூன்று நாளும், செல்வத்தைத் தரும் லட்சுமியை அடுத்த மூன்று நாட்களும், கல்வியைத் தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் வழிபட்டு வர ஒப்பில்லாத பலன்களைப் பெறலாம். தேவியை நோக்கி தவம் புரிந்து அரும் சக்திகளைப் பெற்ற தேவர்களைக் குறிக்கும் விதத்திலேயே கொலுவில் பொம்மைகளை வைக்கிறோம். ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரத்தில் அம்மனை வழிபடுவது நற்பலன்களைத் தரும்.
வழிபாடு
வீடுகளில் கொலுவைத்து வழிபடுவோர் அண்டை அயலாரை தங்களின் வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு புஷ்பம், குங்குமம், கடவுளுக்குப் படைக்கப்பட பிரசாதங்கள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பழம், பொரி, கடலை ஆகியவற்றை நெய்வேத்தியம் செய்து அதனை அருகில் வசிப்போர்களுடன் உண்டு மகிழ்தல் சிறந்தது.
துர்க்காஷ்டமி நாளில் தன்னம்பிக்கை பெருகவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் துர்க்கையை வழிபடுதல் வேண்டும். செம்பருத்தி மற்றும் செவ்வரளி மாலை சூட்டி துர்க்கை அம்மனை வழிபடுதல் கூடுதல் பலன்களைத் தரும். மேலும் துர்க்கைக்கு உரிய படல்களை மனமுருகிப் பாடித் துதிப்போருக்கு கஷ்டங்கள் அகலும் வாழ்க்கை வளமாகும் என்பது இதீகம்.
Post A Comment: